உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்றார் நமது முப்பாட்டன் திருவள்ளுவர். விவசாயம் என்றால் என்ன என கேள்விக்கு அளவுக்கு மாறி விட்ட இன்றைய இளைஞர் சமுதாயமும், நாகரிக வளர்ச்சியும் இருக்கும் இதே சூழலில் தான், மழை பெய்ததும் 2ஆம் போக விவசாயத்திற்கு தயாராகி விட்டான் நமது விவசாயி. இதுகுறித்த செய்தி தொகுப்பை காணலாம்…
விவசாயம், மனித வரலாற்றில் சமூக பொருளாதார மாற்றத்திற்கும், மனித நாகரிகத்தில் முக்கிய காரணியாகும். அப்படிப்பட்ட விவசாயம், கடந்த ஆண்டுகளில், மழை பொய்த்து போனதால், வறண்ட பாலைவனமானது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்த கனமழையாலும், தமிழக அரசின் பல்வேறு நடவடிக்கைகளாலும், விவசாயிகள், முதல் போக நெல் சாகுபடி முடிந்து 2ஆம் போக சாகுபடிக்கு தயாராகி விட்டனர். குறிப்பாக, பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், பெய்த கனமழையால், அழியாறு உள்பட பல நீர் நிலைகள் நிரம்பியுள்ளன. இதனால், கடந்த ஜூன் மாதம் முதல் போக குறுவை நெல் சாகுபடி செய்த விவசாயிகள், அக்டோபர் மாதத்தில் அறுவடை செய்தனர். தற்போது இரண்டாம் போக சம்பா நெல் சாகுபடிக்கு, நாற்றங்காலை நடவு செய்துள்ளனர்.
வயல்களில் உழவு பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், நவீன இயந்திரம் மூலம் நெல் நாற்றங்கால் வயல்களில்
நடவு செய்யும் பணியையும் தொடங்கியுள்ளனர். இயந்திரம் மூலம் நடவு செய்வதால் ஏக்கர் ஒன்றுக்கு 4, 500 ரூபாய் செலவாகும் என்பதால், அதனை வேளாண்மை துறை மானியமாக வழங்கி வருகிறது. அதுமட்டுமின்றி, விதை நெல்கள், உரங்கள் உள்ளிட்டவைகளையும், அரசு வழங்கி வருகி
மருத்துவம், கணிப்பொறி ஆகிய இவற்றின் பின்னால் ஓடிக் கொண்டிருக்கும் மாணவர்கள், விவசாயக்கல்லூரிகளிலும் பயின்று, நமது முன்னோர்கள் போன்று, அடுத்த தலைமுறைக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும். நியூஸ் ஜெ செய்திகளுக்காக, செய்தியாளர் கருப்பசாமி மற்றும் தமிழ்ச்செல்வனுடன்…