பட்டுக்கூடுகள் உற்பத்தி செய்வதில் விவசாயிகள் ஆர்வம்

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே அரசின் நிதிஉதவியுடன், பட்டுக்கூடுகள் உற்பத்தி செய்வதில் விவசாயிகள் மத்தியில் ஆர்வம் அதிகரித்திருக்கிறது.

ஐயன்கொள்ளியை சேர்ந்த விவசாயி குமார ராஜா, மல்பெரி மர இலைகைளை பட்டுப்புழுக்களுக்கு உணவாக பயன்படுத்தி, 15 நாட்களில் பட்டுப்புழுக்கள் தொகுதியை பாதுகாத்து கூடுகளை உற்பத்தி செய்கிறார். 15 கிலோ பட்டுக்கூடுகளுக்கு 150 ரூபாய் வரை கிடைப்பதாக தெரிவிக்கும் அவர்,பட்டுக்கூடு உற்பத்தி மூலம் மாதம் 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் லாபம் பெறலாம் என்றும் கூறுகிறார். 15 நாட்களில் வருமானம் ஈட்ட முடியும் என்றும் குமார ராஜா நம்பிக்கை தெரிவிக்கிறார்.

Exit mobile version