தமிழகத்தில் பிளாஸ்டிக் தடைக்கு பின்னர் வாழை இலைக்கு நல்ல விலை கிடைத்து வருவதால் விவசாயிகள் வாழை பயிரிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த சோமாசிபாடி மற்றும் தென்அரசம்பட்டு ஆகிய பகுதிகளில் சுமார் 40 ஆண்டுகளாக வாழை பயிரிட்டு வருகின்றனர். தற்போது பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு தடை விதித்திருப்பதால் வாழை இலைகளுக்கு நல்ல விலை கிடைக்க தொடங்கியுள்ளது.
இங்குள்ள விவசாயிகள், வாழை பயிரிடப்பட்ட 6 மாதத்திலிருந்து இலைகளை அறுவடை செய்து திருவண்ணாமலை மார்க்கெட்டுக்கு அனுப்புகின்றனர். ஒரு இலையின் விலை 3 ரூபாயிலிருந்து 5 ரூபாய் வரை விற்பனையாகவதாக கூறுகின்றனர்.
ஒரு ஏக்கர் வாழை பயிரில்,செலவினங்கள் போக 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் லாபம் வரை கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.