ஈரோடு மாவட்டம் தாளவாடியில் சின்ன வெங்காயம் விலை கணிசமாக உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தாளவாடியில் அனைத்து வகையான காய்கறிகளும் விளைவிக்கப்படுகிறன. கடந்த சில மாதங்களாக பருவமழை இல்லாததாலும், நீர்நிலைகள் வறண்டு காணப்படுவதால் சின்ன வெங்காய விளைச்சல் குறைவாக உள்ளது.
இதன் எதிரொலியாக சின்ன வெங்காயம் விலை தற்போது கணிசமாக உயர்ந்துள்ளது. கிலோ 30 முதல் 50 ரூபாய் வரை சந்தைகளில் விற்பனையாகி வருகிறது. சின்ன வெங்காயம் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.