நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் பருவமழையால் அரளிப்பூ விளைச்சல் அதிகரித்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
கடையநல்லூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் அரளிப் பூவை அதிகளவில் விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இந்த வருடம் பருவ மழை சரிவர பெய்ததால், இப்பகுதிகளில் அரளிப்பூ விளைச்சல் அதிகரித்துள்ளது. மேலும், பறிக்கப்படும் பூக்களுக்கு சந்தையில் நல்ல விலை கிடைப்பதாகவும், ஒரு கிலோ அரளிப்பூவானது, 130 முதல் 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கேரளா மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் இங்கிருந்து அனுப்பி வைக்கப்படும் அரளிப்புக்களுக்கு நல்ல வரவேற்பு கிடைப்பதாக பூ வியாபாரிகள் கூறுகின்றனர்.