கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
எந்தாண்டும் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் கரூர் மாவட்டத்தில் வெயில் தாக்கம் அதிகம் காணப்பட்டது. இதனால் பொது மக்கள் பெரும் பாதிப்படைந்தனர். கத்திரி வெய்யில் முடிந்தும் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் குறையாத நிலையில், பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்த்து வந்தனர். இந்நிலையில் பலத்த காற்று வீசியதை தொடர்ந்து இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால், சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்நிலையில், வெப்பம் தனிந்து குளிர்ச்சி நிலவியதையடுத்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.