மிளகாய் அதிக விலைக்கு விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சி

நெல்லை மாவட்டம் சேந்தமரத்தில் மிளகாய் நல்ல விலைக்கு விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நெல்லை கடையநல்லூர் அருகே உள்ள சேந்தமரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகளவில் மிளகாய் பயிரிடப்படுகிறது. இந்நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், பல ஏக்கர் மிளகாய் செடிகளில் பூக்கள் கருகி உதிர்ந்து விட்டன. இதனால் விளைச்சல் குறைந்தது. எனினும் சந்தையில் எதிர்பார்த்ததை விட அதிக விலைக்கு மிளகாய் விற்பனையாவதால் விவசாயிகள் நிம்மதியடைந்துள்ளனர்.

Exit mobile version