ஆமணக்கு சாகுபடியில் இலாபம் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி

பெரம்பலூர் மாவட்டத்தில் ஆமணக்கு பயிரிட்டதால் நல்ல லாபம் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டம் அரசலூர் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் விவசாயிகள், மாற்று பயிர்களான ஆமணக்கு சாகுபடி செய்து வருகின்றனர். ஆமணக்கு சாகுபடி மூலம் ஏக்கருக்கு ஒரு டன் முதல் ஒன்றரை டன் வரை ஆமணக்கு விதை கிடைக்கிறது. இதன் மூலம் ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாய் முதல் 60 ஆயிரம் வரை லாபம் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். ஆமணக்கு பயிர் நான்கு மாதங்களில் விளைச்சல் தரக்கூடியதகவும், வறட்சி மாவட்டங்களுக்கு ஏற்ற பயிராகவும் விளங்குகிறது. மேலும் ஊடு பயிர்களாக கொத்தமல்லி, நிலக்கடலை போன்றவை பயிரிடலாம் எனவும், அறுவடை செலவும் மிக குறைவு எனவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version