தமிழக அரசு இலவசமாக வழங்கிய தக்காளி நாற்றுகளால் விளைச்சல் அதிகரித்து, நல்ல லாபம் ஈட்டி வருவதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருகே உள்ள தென்பழஞ்சியில் ஏராளமான விவசாயிகள் கிணற்று பாசனமாக தக்காளி, பயிரிட்டு விவசாயம்செய்து வருகின்றனர். அதில் திருப்பரங்குன்றம் தோட்டக்கலை துறையின் மூலமாக இலவசமாக வழங்கப்பட்ட தக்காளி நாத்துகள் கொண்டு பயிரிடப்பட்ட தக்காளி நல்ல விளைச்சல் கொடுத்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
இங்கு விலையும் தக்காளிகளை பறித்து மதுரை மார்க்கெட்டிற்கு கொண்டு சென்று மொத்தமாக விற்பனை செய்து வருகின்றனர். மேலும் தக்காளியில் நல்ல லாபம் கிடைத்துள்ளதாக தெரிவித்த விவசாயிகள், தக்காளி நாற்றுக்கள் வழங்கிய தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்தனர்.