ஜெயங்கொண்டம் பகுதியில் பச்சை மிளகாய் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியில் தோட்டக்கலை பயிரான நிலக்கடலை, மக்காச்சோளம், எள், கத்தரி, வெண்டைக்காய் ஆகியவற்றை பரவலாக விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது பச்சை மிளகாய் சாகுபடியை கையில் எடுத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு பயிரிட்ட மிளகாய் செடிகள் தற்போது நன்கு வளர்த்து காய்த்துள்ளன. இதனையடுத்து பச்சை மிளகாய் அறுவடைக்கு தயார் நிலையில் இருப்பதால், தினந்தோறும் காய்களை பறித்து அனுப்பும் பணியில் விவசாயிகள் தீவிரப்படுத்தி உள்ளனர். அரசால் வழங்கப்படும் இலவச மின்சாரத்தை கொண்டு தேவையான அளவு தண்ணீர் பாய்ச்ச முடிவதாக கூறும் விவசாயிளர், அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.