தண்டாரம்பட்டு அருகே விளைவிக்கப்பட்டுள்ள பட்டன் ரோஸ் மூலம் நாள்தோறும் வருமானம் ஈட்டி வருவதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
தண்டராம்பட்டு அடுத்த கொளக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் பட்டன் ரோஸ் சாகுபடி செய்துள்ளனர். இந்த பூவிற்கு 3 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது என்று தெரிவிக்கும் விவசாயிகள், பட்டன் ரோஸ் வளர்த்து அறுவடை செய்வதன்மூலம் நாள்தோறும், வருமானம் ஈட்டுவதாக தெரிவித்துள்ளனர்.
இந்த பூ, கிலோ ஒன்றுக்கு 30 ரூபாய் வரையிலும் விலைபோவதாக கூறும் விவசாயிகள் முகூர்த்த நாட்களில் 100 ரூபாய் வரையிலும் விலை போவதாகவும் கூறுகின்றனர். இந்த பூ மூலம் நாள்தோறும் வருமானம் ஈட்டுவதாகவும் தெரிவித்துள்ளனர்.