கோழிக்கொண்டை பூவிற்கு சந்தையில் உரிய லாபம் கிடைப்பதால் அதிகம் பயிரிட்டுள்ளனர்.
திருமணம் மற்றும் விசேஷ நாட்கள் என்பதால் கோழிக்கொண்டை பூவிற்கு நல்ல லாபம் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் அதிக பயிரிடும் கோழிக்கொண்டை பூவிற்கு தேவை அதிகம் இருப்பதால் விவசாயிகள் அதிகம் பயிரிட்டு வருகின்றனர்.
ஒரு கிலோ 40 ரூபாய்க்கு வாங்குவதாகவும் வரும் காலங்களில் இன்னும் விலை உயர வாய்ப்புள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.