பருவநிலை மாற்றம் காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் சம்பங்கி பூ விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் ஆத்தூர், நிலக்கோட்டை, நத்தம் உள்ளிட்ட இடங்களில் சுமார் ஆயிரத்து 600 ஏக்கரில் சம்பங்கி பூ சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சம்பங்கி விதை, கிழங்கு சாகுபடி செய்து ஆறுமாதத்தில் பூவெடுக்க ஆரம்பிக்கிறது. இங்கு விளைச்சலாகும் சம்பங்கி பூக்கள், நிலக்கோட்டை, திண்டுக்கல்லுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன. ஏக்கருக்கு சுமார் 5 முதல் 6 டன் வரை மகசூல் கிடைப்பதாகவும், தற்போது விளைச்சலும் அதிகரித்து விலையும் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்