காலிபிளவர் விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி

தேனி மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் காலிபிளவர் விளைச்சல் அதிகரித்து விலையும் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தேனி மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில்  சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் காலிபிளவர் பயிரிடப்பட்டுள்ளது. நடவு செய்து 90 நாட்களில் பலன் தரக்கூடிய இதில் தற்போது விலை அதிகமாக கிடைப்பதால் விவசாயிகள் நிம்மதியடைந்துள்ளனர். கடந்த ஆண்டைவிட குழிக்கு தற்போது 70 முதல் 80 ஆயிரம் ரூபாய் கிடைப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் அதிகப் படியான மழையின் காரணமாக இங்குள்ள கிணறுகளில் நீர்தேக்கங்கள் உள்ளதால் நல்ல முறையில் நோய் இன்றி ஆரோக்கியமாகவும், கவனமாகவும் பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும் இதன்காரணமாக அதிக விளைச்சல் உள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளனர்.

Exit mobile version