ராமநாதபுரம் மாவட்டத்தில் போதிய மழை இல்லாததால் விவசாயம் பாதிப்பு

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலத்தில் போதிய மழை இல்லாததால் விவசாயம் பாதிக்கப்பட்டதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல் உற்பத்தியில் ஆர்.எஸ்.மங்கலத்திற்கு முக்கிய பங்கு உள்ளது. இப்பகுதியில் உள்ள விவசாயிகள் முழுநேர தொழிலாக விவசாயம் செய்து வருகின்றனர். 4 ஆண்டுகளாக பருவமழை பொய்த்துப் போனதால், விவசாயம் முற்றிலும் பாதிப்படைந்தது. கடந்த இரண்டு மாதத்துக்கு முன்பு பெய்த பருவமழை காரணமாக விவசாயிகள் தங்கள் பணிகளைத் தொடங்கினார்.

இந்நிலையில் பயிர்கள் விளையும் தருணத்தில் போதிய மழை இல்லாததாலும், ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் வகைத் தண்ணீர் போதுமானதாக இல்லாததால் பயிர்கள் கருகி வருகிறது. இதுமட்டுமின்றி பயிர்கள் பூச்சிகளால் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Exit mobile version