மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை பகுதியில் ஒற்றை யானையானது பயிர்களை நாசம் செய்து வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை மற்றும் அம்மன்புதூர் பகுதிகளில் ஒற்றை யானை சுற்றித்திரிந்து வருகிறது. இந்நிலையில், இரவு நேரத்தில் சுப்ரமணி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் புகுந்தது.
பின்னர் அங்கு பயிரிடப்பட்டிருந்த சோளப்பயிர்கள் மற்றும் வாழை கன்றுகளை சேதப்படுத்தியுள்ளது. இதனால் இரவு நேரங்களில் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாமல் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
எனவே ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் விரட்டவேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தோட்டப்பகுதிகளில் யானைகள் வருவதை தடுக்க சோலார் மின்வேலிகள் அமைக்கவேண்டும் என்றும் வனத்துறைக்கு அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.