நாமக்கல் மாவட்டம் மோகனூரைச் சேர்ந்த பெண் விவசாயி, பாரம்பரிய வாழைக்கட்டை முறைக்கு பதிலாக அதிநவீன கேலாவிருத்தி முறை மூலம் வாழைக் கன்றுகளை விளைவித்து வருகிறார். கேலாவிருத்தி முறை என்றால் என்ன ? அந்த முறையில் நவீனத்துவம் குறித்து இந்த தொகுப்பில் காணலாம் …
உலக அளவில், வாழை உற்பத்தியில், இந்தியா முதலிடம் வகிக்கிறது. இந்தியாவில், ஆண்டுதோறும் 0.49 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவில், வாழை பயிரிடப்பட்டு, 26மில்லியன் டன் வரை உற்பத்தி செய்யப்படுகிறது. இவற்றில் 95 முதல் 98 சதவீதம் வாழை விவசாயம், பாரம்பரிய வாழைக்கட்டை முறைகளை பயன்படுத்தியே மேற்கொள்ளப்படுகிறது. பாரம்பரிய முறையின் மூலம் ஒரு வாழை கட்டையிலிருந்து 5முதல் 20 கன்றுகள் மட்டுமே
புதிதாக உருவாகும். இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம், மோகனூரைச் சேர்ந்த விவசாயி செல்வமணி, கேலாவிருத்தி என்ற புதிய முறையின் மூலம் வாழை பயிரிட்டுள்ளார். பாரம்பரிய முறையில் நட்டால் 12 மாதங்கள் கழித்தே வாழை அறுவடைக்கு தயாராகும் வாழை, கேலாவிருத்தி முறையில் 10 மாதங்களில் அறுவடைக்கு தயாராகின்றன. கற்பூரவல்லி, பூவன் உள்ளிட்ட வகைகளை பயிரிட்டு வருவதாகவும், நவீன முறையில் பயிடுவதன் மூலம் அதிக லாபம் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்