வேலூர் மாவட்டத்தில் தமிழக அரசின் பண்ணை குட்டை திட்டத்தில் பயன்பெறும் விவசாயி, அரசிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் விவசாய பரப்பை அதிகரிக்கவும், உற்பத்தித் திறனை உயர்த்தவும், அரசு பல்வேறு நடைவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே சித்தேரி கிராமத்தில் வசிக்கும் விவசாயி பாண்டியன் என்பவர், தமிழக அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், 93 ஆயிரம் ரூபாய் நிதியுதவி பெற்று தனது நிலத்தில் பண்ணை குட்டை அமைத்துள்ளார். இதில் தற்போது பெய்த மழையால் இரண்டு அடிக்கும் மேல் நீர் தேங்கியுள்ளது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் உயருவதுடன், விவசாயத்திற்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளதாக கூறும் விவசாயி பாண்டியன், விவசாயிகள் பயன்பெறும் வகையில் திட்டங்களை வகுத்த தமிழக அரசிற்கு நன்றியை தெரிவித்துக்கொண்டார்.