செஞ்சி அருகே விவசாயி கழுத்தறுத்து படுகொலை

செஞ்சி அருகே, விவசாயி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தலைமறைவாக உள்ள குற்றவாளியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த குறிஞ்சிப்பை கிராமத்தை சேர்ந்த ஜானகிராமன் என்பவர் தனக்கு சொந்தமான வயல்வெளியில் வீடு கட்டி வந்துள்ளார். பக்கத்து வயலுக்கு சொந்தக்காரரான சரவணனுக்கும், ஜானகிராமனுக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தகராறில், சரவணன் ஜானகிராமனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இந்நிலையில், வயல்வெளியில் உள்ள வீட்டில் ஜானகிராமன் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே சரவணன் குடும்பத்துடன் தலைமறைவாகியுள்ள நிலையில், காவல்துறையினர் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Exit mobile version