பொள்ளாச்சி அருகே தென்னை மரங்களில் இளநீரை சேதப்படுத்தும் மரப்பூனை மற்றும் எலிகளை கட்டுப்படுத்த விவசாயி ஒருவர் மேற்கொண்டுள்ள புதிய முயற்சி வரவேற்பை பெற்றுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆலங்கடவு பகுதியில் தென்னை சாகுபடி அதிகளவில் நடந்து வருகிறது. ஆனால் மரப்பூனை, அணில், எலி ஆகியவை தென்னை மரங்களில் ஏறுவதுடன், இளநீரை சேதப்படுத்திவிடுகின்றன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆலங்கடவு பகுதியை சேர்ந்த விவசாயி சண்முக சுந்தரம் தனது தோட்டத்தில் உள்ள தென்னை மரங்களில், விலங்குகள் ஏறாதபடி 2 அடி உயரத்தில் இரும்பு தகடுகளை கட்டிவைத்துள்ளார். இதனால் இளநீர் சேதமடைவது வெகுவாக குறைந்துள்ளதாக விவசாயி சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.