திண்டுக்கல் மாவட்டத்தில் இருமுனை விவசாயத்தால் நல்ல லாபம் கிடைப்பதாக விவசாயி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நத்தம் சுற்றுவட்டார பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் பூ சாகுபடி செய்து வருகின்றனர். விராலிப்பட்டியை சேர்ந்த ராமசாமி என்ற விவசாயி புடலங்காய் பந்தல் அமைத்து, ஆதற்கு கீழே செவ்வந்திப்பூ சாகுபடி செய்துள்ளார். தனக்கு சொந்தமான 50 சென்ட் நிலத்தில் இதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளார்.
ஒரே செலவில் இரட்டிப்பு லாபம் கிடைப்பதாகவும், ஒரு போகத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் வரை லாபம் கிடைப்பதாகவும் விவசாயி ராமசாமி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது போன்ற இருமுனை விவசாயம் செய்வதற்கு அரசு தோட்டக்கலை மூலமாக விவசாயிகளுக்கு முறையான பயிற்சி அளிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.