சமந்தாவிற்கு ரசிகர்கள் வைத்த பிரமாண்ட கட் அவுட்: ஷாக் ஆன சமந்தா

சமந்தா நடிக்கும் ’ஓ பேபி’ திரைப்படம் ஜூலை 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.அதற்காக ஹைதரபாத்தில் உள்ள திரையங்கில் சமந்தாவின் ரசிகர்கள் மிகப்பெரிய கட் அவுட்டை வைத்துள்ளனர்.இதனை பார்த்த சமந்தா ’ஷாக் ஆகி விட்டேன்’ என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

’ஓ பேபி’ திரைப்படம் கொரியாவில் 2014 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன ’மிஸ் கிரானி’ திரைப்படத்தின் ரிமேக் ஆகும்.இப்படம் தமிழ்,தெலுங்கு ஆகிய மொழிகளில் திரைக்கு வரவுள்ளது.மாஸ் ஹீரோக்களுக்கு மட்டுமே பெரிய கட் அவுட் வைப்பது வழக்கம். ஆனால் சமந்தாவின் தீவிர ரசிகரகள் மிகப்பெரிய கட் அவுட் வைத்து அசத்தியுள்ளனர்.இதனை சமூக வலைதளங்களில் பார்த்த சமந்தா ’ஷாக் ஆகி விட்டேன்’ என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Exit mobile version