ஆஸ்திரேலிய வீரர் ஃபான்னிங்க்கு அபராதம் விதிப்பு

தென் ஆப்பரிக்காவில் நடைபெற்று வரும் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டியில் வேண்டுமென்றே இந்திய வீரரை இடித்த ஆஸ்திரேலிய வீரருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவில்  நடைபெற்ற  காலிறுதி இறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது. ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்த போது அந்த அணியின் வீரர் ஃபான்னிங்  ரன் எடுக்கும் போது இந்திய பந்து வீச்சாளர் ஆகாஷ் சிங்கை இடித்தார். இதனால் அதிப்தியடைந்த ஆகாஷ் சிங் சம்பவம் குறித்து நடுவரிடம் முறையிட்டார். இதையடுத்து  ஃபான்னிங்க்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version