ஃபானி புயல்:முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு ஆலோசனை

ஃபானி புயல் எச்சரிக்கையை அடுத்து, மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் தலைமையில் முக்கிய ஆலோசனை நடைபெற உள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தம் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது. இது இன்னும் 36 மணி நேரத்துக்குள் ஃபானி புயலாக மாறும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. புயல் மழை அறிவிப்பினை அடுத்து மேற்கொள்ளப்படவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளது. சென்னை தலைமைச்செயலகத்தில் வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் வருவாய் துறை செயலாளர்களுடன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அவசர ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

Exit mobile version