ஃபானி புயலால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை

வங்க கடலில் நிலைகொண்டுள்ள ஃபானி புயலால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வங்க கடலில் நிலைகொண்டுள்ள ஃபானி புயல் ஆயிரத்து 50 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளதாக குறிப்பிட்டார். மேலும், இந்த புயல், வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா பகுதியில் கரையை கடக்க சாத்தியம் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

Exit mobile version