ஃபானி புயல்: ஒடிசாவில் தயார் நிலையில் மீட்பு படையினர்

ஒடிசா மாநிலத்தில் ஃபானி புயல் இன்று கரையை கடக்கவுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 11 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்

ஒடிசா மாநிலம் பூரியிலிருந்து 320 கிலோ மீட்டர் தொலைவில் ஃபானி புயல் நிலைகொண்டுள்ளது. இந்தநிலையில் மாநிலத்தில் உள்ள கோபல்பூர் மற்றும் சந்த்பாலிக்கு இடையே இன்று, ஃபானி புயல் கரையைக் கடக்கிறது. இதனால், சுமார் 200 கிலோ மீட்டர் வேகத்தில்  காற்றுவீசும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆகையால், வட ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கம், அருணாச்சலம், அசாம் மற்றும் மேகலாயா ஆகிய மாநிலங்களில் தற்போது மழை பெய்து வருகிறது. இந்தநிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒடிசாவில் உள்ள தாழ்வான 15 மாவட்டங்களில் இருந்து 11 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் . புயல் கரையை கடக்கும்போது 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசினால் மின்சார இணைப்பை துண்டிக்கவும்  ஒடிசா அரசு முடிவு செய்துள்ளது. ஒடிசா பேரிடர் மீட்பு படையினர், தேசிய பேரிடர் மீட்பு படையின் 25 குழுக்கள் மற்றும் ஒடிசா மாநில தீயணைப்பு படையினர் ஆகியோர் கடற்கரை கிராமங்களில் குவிக்கப்பட்டுள்ளனர்

Exit mobile version