ஃபானி புயலால் ஒடிஸாவில் 12 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் ஒடிஸா மாநிலத்தில் 175 கிலோமீட்டர் வேகத்தில் ஃபானி புயல் கரையைக் கடந்தது. இதில் பூரி உட்பட 52 நகரங்களும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களும் பானி புயலால் கடும் சேதமடைந்துள்ளன. மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் முறிந்துள்ளதால் மின்சாரவசதி பல்வேறு இடங்களில் தடைபட்டுள்ளது. குறிப்பாக மத்திய மாநில அரசுகளின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் 12 லட்சம்பேர் பத்திரமாக வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் 8 பேராக இருந்த உயிரிழப்பு, 12 பேராக தற்போது உயர்ந்துள்ளது. குறிப்பாக, பாரிபடா பகுதியில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்ததில் 4பேர் அதனடியில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.