ஒடிசாவில் ஃபானி புயலின் கோரத் தாண்டவத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 160 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒடிசாவில் வீசிய ஃபானி புயல் காரணமாக, பூரி கடற்கரை முழுவதிலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் 10 லட்சம் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். ஃபானி புயல் காரணமாக ஒடிசா, ஆந்திரா, பெங்களூரு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கடுமையான மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், புயல் காரணமாக 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 160 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்புயலின் காரணமாக ஏராளமானோர் உயிரிழந்திருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது. மேலும், ஒடிசாவின் கடற்கரையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் எண்ணற்ற மரங்கள் மற்றும் மின்கோபுரங்கள் முறிந்து விழுந்துள்ளன.
கடற்கரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஃபானி புயலால் சுமார் 1000 கிராமங்கள்,51 நகரங்கள் ஒடிசாவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நம்பகத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.