கடாரம் கொண்டான் படத்தை தொடர்ந்து நடிகர் விக்ரம் அடுத்ததாக இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் துவங்கியது. பெரிய பட்ஜெட்டில் தயாராகும் இந்த படத்திற்கு தற்போது இருந்தே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இந்த படத்தில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் “இர்பான் பதான்” இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இர்பான் பதான் மூலம் நடிகராக அறிமுகமாகும் முதல் படமும் இதுதான். மேலும் இந்த படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிக்கவுள்ளார். படக்குழுவினரின் இந்த அறிவிப்பால் தமிழ் சினிமா ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
விரைவில் படக்குழு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.