“online food delivery”-யில் களமிறங்கும் பிரபல நிறுவனம்

சமீப காலங்களாக ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்யும் பழக்கம் மக்களிடையே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதில் swiggy, zomato, uber eats, food panda போன்ற உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் போட்டிப் போட்டுக்கொண்டு வாடிக்கையாளர்களை கவர பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது.

இதற்கிடையில் வருகிற தீபாவளி முதல் ஆன்லைனில் உணவு டெலிவரியில் பிரபல ஆன்லைன் நிறுவனமான ‘அமேசான்’ களமிறங்க உள்ளது. இதற்காக அந்நிறுவனம் 3500 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. மேலும் வாடிக்கையாளர்களை கவர பல்வேறு அறிவிப்புகளை வெளியிடவும் அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன்மூலம் நிறைய பேருக்கு வேலை அமைய வாய்ப்புள்ளது.

 

டிசம்பர் மாதத்திற்குள் 600 நகரங்களில் இந்த சேவையை கொண்டு வர அமேசான் திட்டமிட்டுள்ளது. இதற்காக மற்ற நிறுவனங்கள் உணவகங்களிடம் 20% தொகை வசூலித்து வந்த நிலையில் அமேசான் 25% வசூலிக்க திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே அதிக அளவு பணப் பரிவர்த்தனை நடைபெறும் உணவுச்சந்தையில் அமேசானும் களமிறங்க உள்ளது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Exit mobile version