கோயில் ஊழியர்களுக்கான குடும்ப நல நிதியுதவி உயர்வு

கோயில் ஊழியர்கள் பணியில் இருக்கும்போது மரணித்தால் அவரது குடும்பத்திற்கு வழங்கப்படும் நிதியுதவியை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான கோயில்கள் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2008ஆம் ஆண்டு முதல் கோயிலில் பணியில் இருக்கும்போது ஊழியர் ஒருவர் மரணித்தால் அவரது குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் குடும்பநல நிதியுதவியாக வழக்கப்பட்டு வந்தது. இதனிடையே தற்போது அந்த நிதியுதவியை உயர்த்தி வழங்க வேண்டும் என கோயில் ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து தமிழக அரசுக்கு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பரிந்துரை செய்தார். இதனை ஏற்று குடும்ப நல நிதியுதவியை ஒரு லட்சம் ரூபாயிலிருந்து 3 லட்சம் ரூபாயாக உயர்த்தியும், அதற்கான மாத சந்தாவை 15 ரூபாயிலிருந்து 60 ரூபாயாக உயர்த்தியும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Exit mobile version