தமிழகத்தில் கடந்த மாதத்தை விட, இந்த மாதம் குடும்ப வன்முறைகள் குறைந்துள்ளதாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்புப் பிரிவு காவல்துறை ஏடிஜிபி ரவி தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், குடும்ப வன்முறைகள் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக தொலைபேசி மூலம் வந்த 5 ஆயிரத்து 840 அழைப்புகளின் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும், அதன்படி 48 அழைப்புகள் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த நிலையில், கடந்த மாதத்தை விட இந்த மாதம், குடும்ப வன்முறைகள் குறைந்துள்ளதாகவும், குடும்ப வன்முறைகள் தொடர்பாக வரக்கூடிய அழைப்புகளுக்கு மகளிர் காவல் துறை நேரடியாக சென்று ஆலோசனை வழங்கி தீர்வு கண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.