நீலகிரியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வடமேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து நீலகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பல இடங்களில் மண் சரிவு, மரங்கால் முறிவு போன்றவை ஏற்படுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால், முதுமலை செல்லும் சாலையில் உள்ள கல்லட்டி நீர்வீழ்ச்சி, கோத்தகிரி சாலையில் உள்ள கேத்தரின் நீர்வீழ்ச்சி மற்றும், உயிலட்டி நீர்வீழ்ச்சிகளில் வெள்ள நீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. சாலை ஓரங்களில் இயற்கையாக தோன்றியுள்ள புதிய அருவிகளை சுற்றுலாப் பயணிகள் கண்டு மகிழ்கின்றனர்.