மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் தொடங்கியதும் 200 புள்ளிகள் வரை சரிவை சந்தித்ததால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நேற்று காலை மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் தொடங்கிய போது 400 புள்ளிகள் வரை உயர்ந்து ,பின்னர் 181 புள்ளிகள் வரை சரிந்து 34ஆயிரத்து 134 புள்ளிகளாக இருந்தது.
இன்று காலை பங்கு வர்த்தகம் தொடங்கியதும், 230 புள்ளிகள் வரை சரிந்து முதலீட்டாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சென்செக்ஸ் 33 ஆயிரத்து 902 புள்ளிகளாகவும், நிஃப்டி 72 புள்ளிகள் வரை சரிந்து 10 ஆயிரத்து 172 புள்ளிகளாக உள்ளது.
டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 14 காசுகள் வரை சரிந்து 73 ரூபாய் 70 காசுகளாக உள்ளது. அதே சமயம், கச்சா எண்ணெய் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.