போலியான N95 முகக்கவசங்கள் தீங்கு விளைவிக்கக்கூடும் – மத்திய சுகாதாரத்துறை

விதிமுறைகளை பின்பற்றாமல் தயாரிக்கப்படும் N95 முகக்கவசங்களை பயன்படுத்த வேண்டாமென மத்திய சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குநர் ராஜீவ் கர்க், அனைத்து மாநில சுகாதாரத்துறைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், பெரும்பாலும் பொதுமக்கள் பயன்படுத்தும் சுவாச வால்வுகள் கொண்ட N95 முகக்கவசங்கள் முறையான விதிகளை பின்பற்றி தயாரிக்கப்படவில்லையென தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இத்தகைய முகக்கவசங்கள் தீங்கு விளைவிக்கக்கூடியது என்றும், இதனால் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இயலாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, மத்திய மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றி தயாரிக்கப்படும் N95 முகக்கவசங்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுவதை மாநில அரசுகள் உறுதி செய்து கொள்ள வேண்டுமெனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Exit mobile version