கன்னியாகுமரியில் இருசக்கர வாகனத்தில் வலம் வந்த போலி பத்திரிகையாளர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் திருட்டு இருசக்கர வாகனத்தில் ஜாலியாக, வலம் வந்த போலி பத்திரிக்கையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தக்கலை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்த காவல்துறையினர், அந்த வழியாக வந்த, இரு சக்கர வாகனத்தை நிறுத்தி ஆவணங்களை கேட்டுள்ளனர். அப்போது, தாம் பத்திரிக்கையாளர் என்று கூறிய அந்த நபரின் இருசக்கர வாகனத்தில் பிரஸ் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்ததையும் காட்டியுள்ளார். மேலும், முன்னு, பின்னாக பதிலளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் திருடிய இருசக்கர வாகனத்தில், பிரஸ் ஸ்டிக்கர் என ஒட்டி ஜாலி வலம் வந்தது தெரியவந்தது. அதே சமயம், கேரளாவில் நடந்த பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளிலும் அந்த நபருக்கு தொடர்பு இருப்பதை அறிந்த காவல்துறையினர், கேரள காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

Exit mobile version