போலி மருத்துவர்களை கட்டுப்படுத்திய அம்மா மினி க்ளினிக்:
கிராமப்புறங்களில் ஐந்து கி.மீட்டருக்கு ஒரு ஆரம்பசுகாதரம் நிலையம் அமைக்கப்பட்டிருந்தது. அது மக்களுக்கு போதவில்லை என்று அதிமுக அரசு சார்பாக இரண்டாயிரம் அம்மா மினி க்ளினிக் ஆரம்பிக்கப்பட்டது. அதனை அடுத்து ஆட்சிக்கு வரும் அரசு அதிகப்படுத்த வேண்டுமே தவிர அது முன்னர் இருந்த ஆட்சியாளர்கள் கொண்டு வந்தார்கள் என்பதற்காக முடக்கி விடக்கூடாது. திமுக காழ்ப்புணர்ச்சிக் காரணமாக இந்த திட்டத்தை முடக்கியதோடு மட்டுமல்லாமல் பாமர மக்களின் சுகாதாரம் மற்றும் உடல்நலத்துடன் விளையாடுகிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்க ஒன்று என்று அரசியல் விமர்சகர்கள் விமர்சிக்கின்றனர்.
அம்மா மினி க்ளினிக் ஆரம்பிக்கப்பட்ட காலங்களில் மக்கள் போலி மருத்துவர்களிடம் செல்லாமல் முறையான மருத்துவர்களிடம் சிகிச்சைப் பெற்றனர். இதனால் போலி மருத்துவம் செய்பவர்கள் குறைந்து வந்தனர். ஆனால் தற்போது அவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இது மிகவும் வருத்தமிகு செய்தி. இதற்கு சரியான விசாரணையும், நடவடிக்கையும் இந்த விடியா அரசு எடுக்க வேண்டுமென்று மருத்துவத்துறை சார்பாக தொடர் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.
விடியா அரசும் தமிழ்நாடு மருத்துவத்துறையும் என்ன செய்திருக்க வேண்டும்?
பாமர மக்கள் இந்த போலி மருத்துவர்கள் மூலம் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இதற்கு அரசும் தமிழ்நாடு சுகாதாரத்துறையும் முன்னேச்செரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்க வேண்டும். பொதுமக்களிடம் விழிப்புணர்வினை ஏற்படுத்துவதின் வாயிலாக இதனை செய்திருக்கலாம். பேனர்கள், நோட்டீஸ்கள் வழியாக இதனை செயல்படுத்தியிருந்திருக்கலாமே என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
தொடரும்..
(இக்கட்டுரையின் முதல் பகுதியைப் படிப்பதற்கு கீழுள்ள சுட்டியைச் சொடுக்கவும்)
https://newsj.tv/fake-doctors-in-tamilnadu-dmkfails-part-1/
இக்கட்டுரையில் மூன்றாம் பகுதி கீழுள்ள சுட்டியில் கொடுக்கப்பட்டுள்ளது.
https://newsj.tv/fake-doctors-in-tamilnadu-amma-mini-clinic-closed-dmkfails-part-3/