திருவள்ளூரில் போலி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் 2 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்..
திருவள்ளூர் மாவட்டத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலக அதிகாரியாக ஜெயபாஸ்கர் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஒருவர் லஞ்சம் ஒழிப்புத்துறை அதிகாரி என்று தன்னை அறிமுகம் செய்துள்ளார். பின்னர் ஜெயபாஸ்கரின் மீது புகார் வந்துள்ளதாகவும் அதை விசாரிக்காமல் இருக்க 50 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் எனவும் கூறி மிரட்டியுள்ளார். இதில் சந்தேகமடைந்த ஜெயபாஸ்கர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்போது முதற்கட்டமாக 35 ஆயிரம் ரூபாய் தருவதாகக் கூறியுள்ளார். இதனையடுத்து ஜெயவர்த்தன் என்பவர் வங்கிக் கணக்கு எண்ணை அனுப்பி அதில் பணத்தைச் செலுத்துமாறு கூறினார். வங்கிக் கணக்கு எண்ணின் முகவரியைக் கொண்டு ஜெயவர்த்தனைக் காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில் இதேபோல் அவர், அரசு அதிகாரிகள் பலரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.