தலைக்கவசம் அணிய தவறினால் ரூ.1000 அபராதம்

தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கும் சட்டம் விரைவில் அமலுக்கு வர உள்ளது.

ஒவ்வொரு நாளும் நடக்கும் சாலை விபத்துகளில் 90% இளைஞர்கள் தங்களது உயிரை இழக்கின்றனர். இதனை தடுக்க போக்குவரத்து காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் நாடாளுமன்றத்தில் மோட்டார் வாகன சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து தலைக்கவசம் அணியாமல் வாகன ஓட்டுபவருக்கு விதிக்கப்பட்டிருந்த நூறு ரூபாய் அபராதத்தை ஆயிரம் ரூபாயாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த புதிய அபராதம் அமலுக்கு வரவுள்ளதாக பெருநகர் சென்னை காவல் துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version