புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் மத்திய பா.ஜ.க அரசு தோல்வியடைந்துவிட்டதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற கல்வி நிறுவனம் ஒன்று நடத்திய நிகழ்ச்சியில் பேசிய அவர், பொருளாதார வளர்ச்சிக்கு அமைப்பு சாரா தொழிலாளர்களும், சிறு நிறுவனங்களும் முக்கிய பங்காற்றி வருவதாக கூறினார். இந்தநிலையில் பண மதிப்பிழப்பு நடவடிக்கை, அவசர கதியில் ஜி.எஸ்.டி அமல் உள்ளிட்ட காரணங்களால் வேலை வாய்ப்பு வீழ்ச்சியை சந்தித்திருப்பதாக சுட்டிக் காட்டிய மன்மோகன் சிங், வர்த்தக துறையை ஊக்குவிப்பதற்கு ஆழ்ந்த சிந்தனையில் தோன்றும் சிந்தனை அவசியம் என தெரிவித்தார். மேலும் விவசாயிகளின் தற்கொலை மற்றும் போராட்டங்கள் இந்திய பொருளாதாரத்தின் சமநிலையின்மையை பிரதிபலிப்பதாக சுட்டிக் காட்டினார்.