மதுரை மற்றும் ராமேஸ்வரம் ரயில் நிலையங்களில் பயணிகளுக்காக பல்வேறு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மத்திய சுற்றுலாத்துறையுடன் இணைந்து ரயில்வே துறை சார்பில் மதுரை மற்றும் ராமேஸ்வரம் ரயில் நிலையங்களில் பயணிகளுக்காக பல்வேறு வசதிகள் மேம்படுத்தப்பட்டன. ரயில் நிலையங்களில் வெளிவளாகப் பகுதிகள், பயணச்சீட்டு வழங்கும் இடங்கள், பயணிகள் காத்திருப்பு பகுதியிலிருந்து நடைமேடைக்கு செல்லும் குறுகலான நுழைவுவாயில்கள் உள்ளிட்டவைகள் அகலப்படுத்தப்பட்டுள்ளன.
சுற்றுலா பயணிகளின் வசதிக்காக தமிழ்நாடு சுற்றுலா கழகத்தின் அலுவலகம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் அப்துல்கலாமின் வாழ்க்கை வரலாறு மற்றும் ராமாயணம் தொடர்பான ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.