குழுக்களில் தகவல் பரிமாற்றம் செய்வதை வரும் 26 ஆம் தேதி முதல் நிறுத்த உள்ள பேஸ்புக்

குழுக்களில் தகவல் பறிமாற்றம் செய்வதை வரும் 26ம் தேதி முதல் பேஸ்புக் நிறுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பேஸ்புக்கில் குழுக்களை உருவாக்கி அதில் கருத்துக்கள், தகவல்கள் பரிமாறும் வசதி இருந்து வந்தது. இந்நிலையில், குழுக்களில் செய்திகளை பதிவிடும் வசதியை பேஸ்புக் நிறுவனம் நிறுத்தப்போவதாக கூறப்படுகிறது. மேலும், இதுவரை இருந்த குழுக்களையும் அதில் பதிவிட்டிருந்த கருத்துக்கள் மற்றும் செய்திகளை 26 ஆம் தேதி முதல் நீக்கப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சமூக அக்கறையை வெளிப்படுத்தும் நோக்கில் கொண்டு வரப்பட்ட இந்த வசதியில், தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை பகிர்வதின் மூலம் மோதல் போக்கு அதிகரித்து வருவதாகவும், சமூக அக்கறையை பிரதிபலிப்பதாக இல்லை எனவும் அந்நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தனிப்பட்ட கணக்குகளில் கருத்துக்களை வெளியிடுவது போன்ற தற்போதைய நடைமுறைகள் தொடர்ந்து இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

Exit mobile version