பேஸ்புக்கில் வரப்போகிறது Clear History Option!!!

பேஸ்புக்கில் விரைவில் Clear History Option நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என்று பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.

கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் 5,60,000 இந்தியர்களின் தகவல்களை திருடியதாக பேஸ்புக் ஒப்புக்கொண்டு அதற்கு மன்னிப்பும் கேட்டது.

உலகம் முழுவதும் சுமார் 200 கோடிக்கும் அதிகமானவர்கள் பேஸ்புக் பயன்படுத்தி வருகிறார்கள்.

பொதுவாகவே நாம் பேஸ்புக்கில் செய்யும் ஒவ்வொரு தேடலும் ஒரு History யாக பதிவாகிவிடும். நம் தேடலை பயன்படுத்தும் விளம்பர நிறுவனங்கள் நம்மை பின்தொடர்கின்றனர்.

இதுபோன்று நம்மை கண்காணிப்பதில் இருந்து நம்மை காத்துக்கொள்ள Clear History Option-ஐ கொண்டு வரவுள்ளதாக பேஸ்புக் அறிவித்துள்ளது. இந்த Option-ஐ கொண்டு வருவதன் மூலம், மூன்றாம் தரப்பு விளம்பர நிறுவனங்களும், இணையப்பக்கங்களும் உங்களின் தகவல்களை சேர்த்து வைக்க முடியாது.

நீங்கள் உங்களது History Delete செய்துவிட்டால் நீங்கள் இணையத்தில் தேடியவை தானாக அழிந்துவிடும். உங்களை மற்றவர்கள் கண்காணிக்க முடியாது. இந்த Clear History Option விரைவில் நடைமுறைக்கு வரும் என பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை வர்த்தக அதிகாரி தெரிவித்துள்ளார்.

Exit mobile version