கொரோனா வைரஸை குணப்படுத்தும் FabiFlu மாத்திரை!

கொரோனா வைரசை குணப்படுத்தும் FabiFlu மாத்திரைக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டுத்துறை ஒப்புதல் அளித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், அதற்கான தடுப்பு மருந்தை கண்டறியும் பணியில் பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த கிளென்மார்க் நிறுவனம், FabiFlu என்ற மாத்திரையை தயாரித்துள்ளது. லேசான மற்றும் நடுத்தரமான அறிகுறிகளுடன் கூடிய கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு இந்த மாத்திரையை கொடுத்து பரிசோதனை செய்ததில், 80 சதவீதம் பலன் கிடைத்துள்ளதாக கிளென்மார்க் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த மாத்திரையின் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டுத்துறை ஒப்புதல் அளித்துள்ளதால் விரைவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு மாத்திரையின் விலை 103 ரூபாய் எனவும், 34 மாத்திரைகள் அடங்கிய ஒரு பேக், மூவாயிரத்து 500 ரூபாய் எனவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version