ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம் இன்றுடன் நிறைவு

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விமர்சையாக நடைபெற்று வந்த பிரம்மோற்சவ விழா இன்றுடன் நிறைவு பெறுகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 30ம் தேதி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மோற்சவத்தில், நாள்தோறும் இருவேளைகளில் மலையப்ப சாமி பல்வேறு விதமான பல்லக்கில் வீதி உலா சென்றார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தேரோட்டம் நேற்று விமரிசையாக நடைபெற்றது. தொடர்ந்து இரவு குதிரை வாகனத்தில் கல்கி அவதாரத்தில் மலையப்பசாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிலையில், பிரம்மோற்சவத்தின் கடைசி நாளான இன்று, திருமலை கோயிலுக்கு அருகேயுள்ள புஷ்கரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது.

Exit mobile version