டிராக்டர் மற்றும் பண்ணை இயந்திரங்களை விவசாயிகள் வாடகைக்கு விடவும், வாடகைக்கு எடுப்பதற்குமான கைபேசி செயலி சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். விவசாயிகளின் மானிய விவரங்கள், பயிர் காப்பீடு செய்த விவரங்கள் உள்ளிட்ட 12 முக்கிய சேவைகளை தெரிந்துகொள்ள, உழவன் என்னும் கைபேசி செயலி அண்மையில் தமிழக அரசால், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த செயலியில் கூடுதலாக டிராக்டர் மற்றும் பண்ணை இயந்திரங்களை, விவசாயிகள் வாடகைக்கு விடுவதற்கும், எடுப்பதற்குமான கூடுதல் சேவை இணைக்கப்பட்டுள்ளது. இதை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமைசெயலகத்தில் துவக்கி வைத்தார். கைபேசி செயலியை பயன்படுத்த முடியாதவர்கள், 1800 420 0100 என்ற கட்டணமில்லாத தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு சேவைகளை பெற்றுக்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டது.
இந்நிகழ்வில், வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு, தலைமைச் செயலாளர் மற்றும் பல்வேறு அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.