அழிந்துவரும் பாறுகழுகு வகைகள்:பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

அழிந்துவரும் பாறு கழுகு வகைகளை பாதுகாப்பது குறித்து, ஒலி மற்றும் ஒளி அமைப்பின் மூலம் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம் மசினகுடி, சீகூர், சிறியூர், தெங்கு மறஹா டா போன்ற வனப் பகுதியில், பாறு கழுகு அதிகமாக காணப்படுகிறது. கடந்த 1990ம் ஆண்டுகளில் ஆயிரக்கணக்காக இருந்த பாறு கழுகுகளின் எண்ணிக்கை, தற்போது நூற்றுக்கணக்காக குறைந்துள்ளன. இந்த நிலையில், வனத்துறையுடன் சமூக ஆர்வலர்கள் மற்றும் கழுகு வகைகளை அறிந்த தனிக்குழுவும் சேர்ந்து, அழிந்து வரும் பாறு கழுகு வகைகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக, இந்த கழுகள் குறித்து தாவரவியல் பூங்காவில், LED ஒலி & ஒளி அமைப்பின் மூலம், சுற்றுலா பயணிகளும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தொடங்கிவைத்தார். மேலும், இந்த கழுகு வகைகளை தெரிந்து கொள்ளும் வகையில் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் ஒலி அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version