மருத்துவ படிப்பிற்கான விருப்ப கல்லுரிகளை தேர்வு செய்யும் அவகாசம் நீட்டிப்பு

பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு மற்றும் நீதிமன்ற விவகாரம் காரணமாக மருத்துவ படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீடுக்கான விண்ணப்பம் பதிவு செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது

மருத்துவ படிப்பிற்கான விருப்ப கல்லுரிகளை தேர்வு செய்யும் அவகாசம் 25ஆம் தேதி வரை இருந்தது. இந்தநிலையில் முதல் சுற்றுக்கான கலந்தாய்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய பொது மருத்துவ சேவைகள் இயக்குனரகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் முதல் சுற்று கலந்தாய்வில் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு குறித்து சில பிரச்னைகள் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை உயர் நீதிமன்றத்தில் 2016 மற்றும் 2017ல் தொடரப்பட்ட வழக்கின் அம்சங்களை ஆய்வு செய்ய வேண்டியுள்ளதாகவும், இதனால் மறு அறிவிப்பு வரும் வரை ஆன்லைனில் விருப்ப கல்லூரிகளின் பதிவை மேற்கொள்ளலாம் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version