2020-21ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் தனிநபருக்கு ஜூலை 31ம் தேதியாக இருந்தது. இந்தநிலையில், செப்டம்பர் 30 வரை மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இதேபோன்று நிறுவனங்களுக்கு அக்டோபர் 31ம் தேதி வரை இருந்த காலக்கெடு நீட்டிக்கப்பட்டு நவம்பர் 30 தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது, இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், வருமான வரி தாக்குதல் செய்வோருக்கு உள்ள இடர்பாடுகளை களையும் வகையில், மத்திய நேரடி வரிகள் வாரியம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதனிடையே, வருமான வரி தாக்கலுக்கான புதிய இணையதளத்தை வருமான வரித்துறை தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.