ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு தொடர்பாக, ப.சிதம்பரத்தை வரும் திங்கட்கிழமை வரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக கடந்த 21 ஆம் தேதி முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். இதனையடுத்து ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதை தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட சிதம்பரத்தை மின்னஞ்சல் பரிமாற்றம் குறித்து விசாரிப்பதற்காக மேலும் 4 நாட்களுக்கு காவலை நீட்டித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ப. சிதம்பரத்தை கிடைத்துள்ள ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் அடிப்படையில் வரும் திங்கட்கிழமை வரை காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் சிபிஐக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து ப.சிதம்பரம் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.